வங்க கடலை மிரட்டும், 'வர்தா' புயல், இன்று சூறாவளியுடன், சென்னை வழியே கரையை கடக்கிறது.
துறைமுகங்கள், அனல் மின் நிலையங்களுக் கும் கடும் ஆபத்து உள்ளது என்றும்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, கடலுார், வேலுார் மாவட் டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக் கப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் மழை இப்போது இல்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வங்க கடலில், கடந்த, 7ல், உருவான காற்ற ழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக வலுப் பெற்று புயலாக உருவெடுத்துள்ளது. இதற்கு, பாகிஸ்தானால் வைக்கப்பட்ட, 'ரோஜா மலர்' என்ற பொருளில், 'வர்தா' என, பெயரிடப்பட்டு உள்ளது.
நான்கு நாட்களுக்கு முன், தெற்கு அந்தமானில் பீதியை ஏற்படுத்திய, 'வர்தா' புயல், அந்தமான் தீவுகளில் பலத்த மழையை கொட்டியது. அதனால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணி கள், கடும் தவிப்புக்கு ஆளாகினர். பின், அங்கி ருந்து நகர்ந்த புயல், ஒடிசாவுக்கும், விசாகப் பட்டினத்துக்கும் இடைப்பட்ட பகுதியை நோக்கி சென்றது.
ஆனால், காற்றின் திசை மாற்றத்தால், ஆந்திரா வின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கில்,நெல்லுார் - காக்கிநாடாவுக்கு இடைப்பட்ட பகுதியை நோக்கி நகர்ந்தது. பின், வட கிழக்கிலிருந்து
வலுவாக வீசிய காற்று, அனைத்து கணிப்பு களையும் தாண்டி, புயலை மேற்கு நோக்கி திருப்பிவிட்டுள்ளது.
இந்திய வானிலை மைய அதிகாரிகளின் தகவல் படி, நேற்று மாலையில், சென்னைக்கு தெற்கே, 300 கி.மீ., - நெல்லுாருக்கு தெற்கே, 370 கி.மீ., துாரத்தில்,வர்தா புயல் மையம் கொண்டிருந்தது. இது, கரையை நோக்கி, மணிக்கு, 20 கி.மீ., வேகத்தில் நகர்கிறது.அதிகாலை, சென்னை கடற்கரைக்கு, 100 கி.மீ., துாரத்திற்குள் நெருங்கி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியதாவது:
மிகத் தீவிர புயலாக உருவெடுத்துள்ள வர்தா, கரையை நெருங்கும் போது தீவிரத்தை இழந்து, புயலாக வலுவிழக்கும். கரையை கடக்கும் போது, மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். இன்று பகல், நெல்லுாருக்கும், புதுச்சேரிக்கும் இடையே, நேரடியாக சென்னை வழியே, புயல் கரையை கடக்கும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் உட்பட தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்யும். 10 அடி உயரத்திற்கு மேல் அலைகள் எழும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்; படகுகளை பத்திரப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
வர்தா புயல், சென்னை மற்றும் புறநகர் பகுதிக ளான, மீஞ்சூர், எண்ணுார், திருவொற்றியூர் பகுதிகளை நேரடியாக தாக்கும். துறைமுகங் கள், அனல் மின் நிலையங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுக்கு, கடும் ஆபத்து ஏற்பட்டுள் ளதால் முன்னெச்சரிக்கை யாகபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
'கடலுார், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப் புரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு; மற்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பில்லை' என, வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிப்பு என்ன?
மழை மற்றும் காற்றால், குடிசைகள், மண் வீடுகள், தற்காலிக கொட்டகைகள், சேதமாக லாம். நெற்கதிர்கள், வாழைத் தோட்டங்கள், வலுவிழந்த மரங்கள் சாயும். சாலைகளில் மரங்கள் முறிந்து விழுவதால், உயர் மின் கம்பங்கள் மற்றும் கேபிள்கள் அறுந்து விழும்; மின் தடை ஏற்படும். நிலைமையை சமாளிக்க, பொதுமக்கள் முன் கூட்டியே மெழுகுவர்த்தி களை வாங்கி வைப்பது நல்லது.
சென்னை துறைமுகத்தில் 10ம் எண் எச்சரிக்கை கூண்டு
* வர்தா புயலால், சென்னை, எண்ணுார் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில், உச்சபட்ச ஆபத்தை தெரிவிக்கும், 10ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 'புயலால் துறைமுகத்திற்கு கடும் ஆபத்து ஏற்பட உள்ளது' என, இதற்கு அர்த்தம். இதற்கு மேல், எச்சரிக்கை கூண்டு இல்லை
* கடலுார், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில், எட்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு, 'தீவிரமான புயல் கரையை கடக்க வருகிறது; வெளியே வராதீர்கள்' என, அர்த்தம்
* பாம்பன், துாத்துக்குடி துறைமுகங்களுக்கு, இரண்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு, 'கடலுக்குள் புயல் நிலை கொண்டுள் ளது; துறைமுகங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்' என, அர்த்தம்.